ஏற்கனவே தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் சில இயங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தமிழகத்தில் சென்னையிலிருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வருகிறது. தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளன. அது மதுரையிலிருந்து பெங்களூருக்க இடையே ஒரு வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து- நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளன. இம்மாத இறுதியில் இந்த இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.