தமிழகத்துக்கு வானிலை முன்னெச்சரிக்கை!

Filed under: தமிழகம் |

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும், குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 13ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.