தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா?

மத்திய அரசு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை மானிய தவணைத் தொகை 6,195 கோடி ரூபாயை 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது.

15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை 6195 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு வெறும் 355 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் கேரளாவுக்கு 1,276 கோடி ரூபாயும், இமாச்சலப் பிரதேசத்துக்கு 953 கோடி ரூபாயும், பஞ்சாப்புக்கு 638 கோடி ரூபாயும், அசாமுக்கு 631 கோடி ரூபாயும், ஆந்திராவுக்கு 491 கோடி ரூபாயும் உத்தரகாண்டுக்கு 423 கோடி ரூபாயும் மேற்கு வங்கத்துக்கு 417 கோடி ரூபாயும் அளிக்கப்பட்டுள்ளது. குறைந்த நிதியே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அது சம்மந்தமாக அதிருப்தி கிளம்பியுள்ளது.