தமிழருவி மணியன் திடீரென தனது கட்சியின் பெயரான காந்திய மக்கள் இயக்கம் என்பதை மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சி இனி காமராஜர் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர செய்வதற்காகவே இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் தீவிர அரசியலில் நுழைய இருப்பதாகவும் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழருவி மணியன் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அதன் பின்னர் அதில் தோல்வி அடைந்தார்.