தமிழிசை விவகாரத்தில் தயாநிதி மாறன் கண்டனம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழிசையிடம் நடந்து கொண்டது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நடந்து கொள்வாரா என்று திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமித்ஷாவுக்கு தமிழிசை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவில் வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழிசை சௌந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பதாகக் கூறப்படும் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர். அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா? தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா?” தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.