அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மத்திய அரசிடம் விளம்பரத்திற்காக நிவாரண தொகை கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
எடப்பாடி பழனிச்சாமி “வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வேளாண் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் இழப்பீடு தரவேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யாமல் நிவாரண தொகைகயை திமுக அரசு கேட்டுள்ளது. சேதத்தை கணக்கிடாமல் நாடாளுமன்றத்தில் 6000 கோடி ரூபாய் டி.ஆர்.பாலு நிவாரணத்தை கேட்டுள்ளார். விளம்பரத்துக்காகவே மத்திய அரசிடம் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. மக்கள் பிரச்சனையை கணக்கில் கொண்டு மத்திய அரசு உடனடியாக நிவாரண தொகையை விடுவிக்க வேண்டும்” என்றும் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.