தமிழ்நாடு அரசு நடவடிக்கை

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேர முடியாத 777 மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்தாண்டு தமிழகத்தில், 2021&-22ம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு முடித்துவிட்டு, ஏழ்மை, வறுமையின் காரணமாக உயர்கல்வி செல்ல முடியாத 777 மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசு கலை மற்றும் அறியல் கல்லூரிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வரவழைத்து மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் கல்லூரியில் உள்ளதா எனத் தெரிந்த பின், மாணவர்களை கல்லூரியில் சேர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் விரும்பிய பாடப்பிரிவுகள் இல்லாதபோது, அவர்களுக்கு ஆலோசனைகள் கூறி, அவர்களை வேறு பாடப்பிரிவுகள் தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும் எனவும், கல்விக்கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் கல்வி உதவித்தொகை வழங்க வழிகாட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.