தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை!

Filed under: தமிழகம் |

என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்தனர்.

நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படுபவர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனை என்பது கோவை, சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.