தளபதி 68 படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இவரோடு படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. படம் ஹாலிவுட்டில் 2012ம் ஆண்டு வெளியான “லூப்பர்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் இஸ்தான்பூல் நாட்டில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் இஸ்தான்புல்லில் எடுத்த புகைப்படத்தை பகிர, விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.