தள்ளிப்போகும் இந்தியன் 2 ரிலீஸ்!

Filed under: சினிமா |

சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் “இந்தியன் 2” திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ஜூலை மாதம் தள்ளிவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கும் மேலாக “இந்தியன் 2” திரைப்படம் தொடங்கப்பட்டு பல்வேறு பிரச்னைகளை கடந்து தற்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து “இந்தியன் 2,” “இந்தியன் 3,” “கல்கி” மற்றும் “தக் லைஃப்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் “இந்தியன் 2” பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்தியன் ஜூன் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால் சினிமா வட்டாரத்தில் முதலில் ஜூன் 13ம் தேதி என்றும் பிறகு ஜூன் 27ம் தேதி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் ஜூலை 17ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கவிருந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸுக்கான பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.