இயக்குனர் தேசிங் பெரியசாமி “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை.
தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்துக்காக லொகேஷன் தேடுதல் உள்ளிட்ட முன் தயாரிப்புப் பணிகளை இயக்குனர் இப்போது முடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தை தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், இப்போது படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புகைப்படங்களோடு ஹேஷ்டேக்காக “BLOODandBATTLE” என்று குறிப்பிட்டுள்ளதால் அதுதான் படத்தின் டைட்டிலாக இருக்குமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.