அதிமுக பிரபலமாக இருந்த கோவை செல்வராஜ் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அதிமுகவில், அதிருப்தியாளராக கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்துள்ளார். அவர் ஓபிஎஸ் மீதும் ஈபிஎஸ் மீதும் அதிருப்தியடைந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் முக்கிய முடிவு எடுக்க போவதாகவும் கூறியிருந்த கோவை செல்வராஜ் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவை ஓபிஎஸ், இபிஎஸ் நினைத்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவர்கள் காப்பாற்ற தவறியதால் தான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.