பிரதமர் மோடி திமுகவை வீட்டுக்கு அனுப்ப பாஜகவால் மட்டுமே முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை, எல்.முருகனை ஆதரித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தலில் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் எங்கு சென்றாலும் பாஜகவின் ஆதிக்கும் தெளிவாக தெரிகிறது. ஜவுளி துறையில் சிறந்து விளங்கும் கோவையில் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் நடவடிக்கையால் கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டுள்ளது.வறுமையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை பாஜக செய்து தந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் வறுமையை ஒழிக்காதது ஏன்? திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர். பொய் சொல்லி ஆட்சியில் இருப்பது தான் திமுக, காங்கிரஸ் போன்ற குடும்ப கட்சிகளின் ஒரே நோக்கம். திமுக காங்கிரஸ் கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் வறுமை ஒழிக்க முடியவில்லை. தங்கள் வாரிசுகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதையே திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நினைக்கின்றன. பழங்குடியின பெண்ணை குடியரசுத் தலைவராக நியமித்தது பாஜக தான். பட்டியலின, பழங்குடியின மக்கள் அதிகாரத்துக்கு வருவதை திமுக காங்கிரஸ் விரும்பவில்லை” என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.