திமுக வேட்பாளர் குறித்து ஜவாஹிருல்லா அதிருப்தி!

Filed under: அரசியல்,தமிழகம் |

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா திமுக அறிவித்துள்ள 21 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “திமுக வேட்பாளர் தேர்வு தனக்கு மகிழ்ச்சி தரவில்லை. காங்கிரஸ் கட்சியாவது முஸ்லிம்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் தரும் வகையில் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று எழுதியுள்ளார். சமீபத்தில் திமுகவின் 21 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி 3 பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர். அதில் இரண்டு பேர்களான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.