திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யும் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.