திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்பி மஹுவா மொய்த்ரா “என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் என்னுடைய தலைமுடியை கூட தொட முடியாது” என பேட்டியளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மீது நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ஆவேசமாக பதில் அளித்துள்ளார். என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற விரும்பும் நபர்களால் எனது தலை முடியை கூட தொட முடியாது என்று தெரிவித்தார். மேலும் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் தர்ஷன் என்பவரிடமிருந்து பரிசு பொருளை லஞ்சமாக பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.