திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்!

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் “லியோ” திரைப்படம் குறித்து இவர் பேசியபோது திரிஷாவை பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்திருந்தது. லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பலரும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கையும் வெளியிட்டார் மன்சூர் அலிகான். அவர் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் திரிஷாவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. எழுத்துப் பூர்வமாக விளக்கமளிக்க திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. திரிஷாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானிடமும் ஆயிரம் விளக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தது.