திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் ஷாஜி தாமஸ், சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு!

Filed under: தமிழகம் |

திருச்சி, ஜூன் 21

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குனர் சாஸ்திரி இந்தோ-கனடிய கழக தலைவராகத் தேர்வு

சாஸ்திரி இந்தோ-கனடிய கழகத்தின் (SICI) வருடாந்திர சந்திப்பு இந்தாண்டு ஜுன் மாதம் 20 தேதி நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் இந்தாண்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாஸ்திரி இந்தோ-கனடிய கழகமானது இந்தியா மற்றும் கனடா நாடுகளின் கல்வி, அரசு, குடியியல் மற்றும் தொழில் துறைகளில் வளர்ச்சியடையும் வகையில் ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்குகள் அமைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. மேலும் இதன் வேலைவாய்ப்பு மற்றும் கூட்டுறவு திட்டங்களின்மூலம் இருநாட்டு மாணவர்களும் பயனடைகின்றனர். மேலும், இதன் நூலகத் திட்டத்தின்மூலம் இக்கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கும் கல்லூரிகளின் மாணவர்களும் பேராசியர்களும் பயனடைகின்றனர்.

2005ம் ஆண்டு இருநாட்டு அமைப்பான இந்த கழகமானது ஐஐடி, என்ஐடி உட்பட 110 இந்திய கல்லூரிகளையும் 34 கனடா பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய அமைப்பாகும். சட்டம், தொழில்நுட்பம், மேலாண்மை, அறிவியல் 
துறைகளில் ஐக்கிய நாடுகளின் இலக்குகளை அடைவதிலும் பெரும்பங்காற்றுவது குறிப்பிடத்தக்கது.