அகில இந்திய காங்கிரசில் அதிரடி மாற்றம் ஏற்படுகிறதாம். பிரியங்கா காந்திக்கு முக்கிய பதவி கொடுக்க சோனியா சம்மதித்து விட்டாராம். இதனால் வடக்கு, வடகிழக்கு, தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரசின் செல்வாக்கை அதிகரிக்க, வலிமையான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக காங்கிரஸ் உள்வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. காங்கிரஸ் மாநில முதல்வர்களின் மாற்றம் நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பாராளுமன்றத் தோல்விக்குப் பிறகு காங்கிரசை குறைகூறிய சுயநல காங்கிரஸ்வாதிகளுக்கு ஆப்பு அடிக்கப்படும் என்ற கருத்து உலவுகிறது.
தமிழக சிதம்பரம் தேவையற்ற நிலையில் அரசியல் கருத்துக்களை உதிர்த்து சிக்கலில் மாட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகால அமைச்சரவையில் அனைத்து முடிவுகளுக்கும் தலையாட்டிய முன்னாள் நிதியமைச்சர், தற்போது குறைகூறுவதை கொதிப்புடன் காங்கிரஸ் தலைவர்கள் நோக்குகிறார்களாம். காங்கிரசுடன் தி.மு.க.வை அரவணைத்து காங்கிரசின் தனித்தன்மையை அடகுவைத்து, காங்கிரஸ் ஆதரவை தமிழகத்தில் தொலைத்தவராக வாசன் கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.
தவளை தன் வாயால் கெடும். இது தற்போதைய பீகார் முதல்வருக்கு பொருந்தும். தலித் இனத்தைச் சேர்ந்த இவர் தேவையற்ற கருத்துக்களை உதிர்த்து தற்போது பதவி இழக்கும் நிலையில் உள்ளார். இவரை இழுக்க பா.ஜ.க. ராம்விலாஸ் பஸ்வான் மூலம் முயற்சி செய்கிறதாம். பீகாரில் லாலு, நிதிஷ்குமார், காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாக கூறுகிறார்கள். பா.ஜ.க.வின் உட்கட்சி பூசல் பீகாரில் பா.ஜ.க.வின் செல்வாக்கை குறைத்து உள்ளதாகக் கூறுகிறார்கள்.
இலங்கை பிரச்னை தற்போது தேவையற்ற நிலையில் தீர்க்க முடியாத பிரச்னையாக தமிழக அரசியல்வாதிகள் நாடகம் ஆடுகிறார்களாம். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கொல்ல இலங்கை அரசியல்வாதிகளுக்கு இந்திய நாட்டை காட்டிக் கொடுத்த தமிழக & இந்திய அரசியல்வாதிகள், தற்போது தங்கள் வறட்டு கௌரவத்திற்காக தமிழ்குலத்தை பழிவாங்குவதாக இலங்கை மக்கள் கூறுகிறார்கள்.
அடுத்தது அ.தி.மு.க. தலைவியின் அதிரடி நடவடிக்கைகள் இந்த மோசமான அரசியல்வாதிகளுக்கு கசப்புணர்வை ஏற்படுத்தியதாம். மேலும் இலங்கை அதிபரின் தமிழ் குலத்திற்கு எதிரான அரசியல் வெறி, உலக நாடுகளில் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளதாம். தமிழ் மக்களின் எழுச்சி உலகநாடுகளில் பரவியதைக்கண்ட பொறாமைக்கார அரசியல்வாதிகளால், தமிழகம் காட்டிக்கொடுக்கப் பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவையற்ற நிலையில் தமிழக கடலோர எல்லைகளை இந்திய கப்பல் படைகளால் தளர்த்தப்பட்டு, இலங்கை கப்பல் படையை இந்திய எல்லைக்குள் அனுமதித்து, தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் என்ற கசப்பான உண்மை வெளியுறவு துறையில் கிசுகிசுக்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தமிழக மக்களால் செல்லக்காசாக மாறிவிட்டதாம். தமிழக பா.ஜ.க. தனது ஆணவத்தாலும், பிடிவாதத்தாலும் இலங்கை அதிபருக்கு தமிழக நலன்களை பலியிட தயாராக உள்ளதாம். 5 மீனவர்களின் விடுவிப்பு இந்திய & இலங்கை வெளியுறவு சட்டத்தின்படி நடந்த நிகழ்வாக கூறுகிறார்கள். தமிழக அரசு நீதிமன்ற செலவுக்கு நிதி அனுப்பியதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். பிரதமர் மோடியின் கண்டிப்பான அறிவுரை இலங்கை அதிபரை கலக்கியுள்ளது. அத்வானிக்கு எதிராக மோடி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழக பா.ஜ.க. அறிவாளிகள் அவரை பழிவாங்க தமிழர்களின் நலன்களை கேடயமாக பயன்படுத்துவதாக பாராளுமன்ற மைய ஹாலில் கிசுகிசுக்கிறார்கள்.
தமிழகத்தின் திருச்சி மாவட்டம், புரதான வரலாற்று சின்னங்கள் கொண்ட புனித நகரம். தற்போது அ.தி.மு.க. தலைவர்களாலும், அவர்களது உட்கட்சி பூசலாலும் திருச்சி மாநகர நிர்வாகம் முடங்கி கிடப்பதாக கூறுகிறார்கள். துணிச்சலான நடவடிக்கை எடுத்து மக்கள் குறை தீர்க்கும் திருச்சி ஆட்சியருக்கு தமிழக அமைச்சர்கள் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஜெயலலிதா மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக திருச்சியில் பல மத்திய அரசு திட்டங்களை முற்றிலுமாக நிறுத்தி, திருச்சியின் புகழை அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள சமூகநல அமைப்புகள், தங்களுக்குள் பணபலம், வறட்டு கௌரவம் கொண்டு திருச்சியின் புனிதத்தன்மையை அழித்துவிட்டார்களாம்.
மத்திய ரயில்வேத்துறை ஆணவம் கொண்ட தமிழக ரயில்வே அதிகாரிகளால் திருச்சியிலிருந்து செல்லும் பல புகைவண்டிகளை நிறுத்திவிட்டார்களாம். திருச்சி விமானத்துறையும் பல விமானங்களை நிறுத்தி விட்டதாகக் கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய விமான நிறுவனம் ஏர் இந்தியா திருச்சி கிளையை மூடி, மதுரையில் மாற்றப்போவதாகக் கூறுகிறார்கள்.