திருநங்கையாக நடிக்கும் சிம்பு!

Filed under: சினிமா |

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது. சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் சிம்பு துபாயிலிருந்து தற்போது திரும்பியுள்ளதால் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. இத்திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு வேடம் திருநங்கை வேடமாம். அதற்காக சிம்பு இப்போது சில பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.