ரூ.20 கோடி வருமானம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைன் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 டோக்கன் தினசரி 20,000 எண்ணிக்கையில் ஆன்லைனில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.