திரைப்பட பிரியர்களே உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியானது !!

Filed under: சினிமா,தமிழகம் |

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது அத்துடன் திரையரங்கில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களுக்கு தியேட்டரில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 10-ந்தேதி தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் செயல்பட அனுமதி இல்லை.திரையரங்கு வளாகத்திற்குள் எப்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும். அனைவரும் ஆரோக்கிய செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
திரையரங்கின் நுழைவாயிலில்,பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோனா நோய் அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் அணியாதவர்கள் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது.
சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மொத்த இருக்கைகளுள் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியே கடைபிடிக்கும் வகையில் இருக்கை அமைப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனே தெரிந்து கொள்ள நமது நெற்றிக்கண் சமூக வலைத்தள பக்கங்களை பின்பற்றி கொள்ளவும்