கோவா திரைப்பட விழா தேர்வு குழுவினர்களில் ஒருவரான நாடவ் என்பவர், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்” திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் மோசமான படம் என்று கூறியுள்ளார். இவர் கூறிய கருத்திற்குகடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
ஏற்கனவே இஸ்ரேல் தூதர் நாடவ் பேச்சுக்கு தனது மன்னிப்பை கேட்டுள்ளார். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் அதற்குண்டான பதிலில், “தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை நாடவ் விமர்சனம் செய்தது வெட்கக் கேடானது. சித்திவிநாயகர் அவருக்கு அறிவை கொடுக்கட்டும். பொய்யின் உயரம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சரி உண்மையுடன் ஒப்பிடுகையில் அது எப்போதும் சிறியதே” என்று கூறியுள்ளார். “தி காஷ்மிர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை விமர்சித்த நாடவ்வுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. “தி காஷ்மிர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்த செய்தியை பதிவு செய்த ஒரு சில ஊடகங்கள் அவருக்கு கண்டனம் குவிந்து வரும் செய்தியை இருடிப்பு செய்து வருகிறது.