‘தி கேரளா ஸ்டோரி’ தமிழ்நாட்டில் வெளியிடதடையா?

Filed under: சினிமா |

மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம். இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. கேரளாவிலுள்ள அப்பாவி பெண்களை முஸ்லிமாக மாற்றி ஆப்கானிஸ்தான் அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் வலுக்கட்டாயமாக சேர்ப்பதாக படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கேரளாவை அடுத்து தமிழகத்திலும் படத்தை வெளியிட அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்திரைப்படம் வெளியானால் கேரளாவை போல தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதால் உளவுத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.