மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தால் விபரீதம் எங்களை குற்றம் சொல்ல கூடாது” என்று கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வழக்கு விசாரணையில் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் நாளை முதல் மேற்குவங்க மாநிலத்திலுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டால் அதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து கருத்து கூறிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் இது மாநில அரசின் வெற்றி தோல்வி என்ற கோணத்தில் கட்டுக் கதையை சித்தரிக்க முயல வேண்டாம். “தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை திரையிடுவது மூலம் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் எதிர்க்கட்சியினர் எங்களை குறை சொல்லாதீர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.