“தி வாரியர்” என்ற படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படம் ‘தி வாரியர்’. இத்திரைப்படத்தை லிங்குசாமி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 14ம் தேதி இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரெயிலர் மே 14ம் தேதி மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராம் பொத்தினேனி, ஆதி, கீர்த்தி ஷெட்டி, அக்ஷரா கவுடா, நதியா, பாரதிராஜா, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று.