தீபாவளிக்கு வெளியாகிறது கார்த்தி திரைப்படம்!

Filed under: சினிமா |

வரும் ஆண்டு தீபாவளிக்கு நடிகர் கார்த்திக் நடித்து, பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள “சர்தார்” திரைப்படம் வெளிவர போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர் பி.எஸ்.மித்ரன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்து “சர்தார்” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ராஷி கண்ணா உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. நாளை கார்த்திக்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. சர்ப்ரைஸ் அறிவிப்பாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.