நடிகர் அஜீத் நடித்து வரும் “துணிவு’’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள #சிலீவீறீறீணீசிலீவீறீறீணீ பாடல் ஷூட்டிங் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
“துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகை மஞ்சுவாரியர், நடிகர் அஜீத்குமார், உட்பட நடிகர்கள் தங்களின் டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். சமீபத்தில், “துணிவு” பட இசையமைப்பாளர் ஜிப்ரான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் பற்றிய அப்டேட்டை கொடுத்தார். அதில் பாடலாசிரியர் வைசாக் எழுதியுள்ள “சில்லா சில்லா’’ என்ற பாடலை அனிருத் குரலில் ஒலிப்பதிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார். இப்பாடலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், #ChillaChilla என்ற பாடலின் ஷூட்டிங் இன்று தொடங்கி புதன்கிழமை வரை நடக்கவுள்ளதாகவும், இதற்கு கல்யான் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று அஜீத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.