துணை முதலமைச்சராகிறார் பவன் கல்யாண்!

Filed under: அரசியல்,இந்தியா |

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி சந்தித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக கடந்த 12ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். ஜன சேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதலமைச்சராகவும், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல் சுற்றுச்சூழல், காடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இன்று சுன சேனா தலைவர் பவன் கல்யாண் ஆந்திராவில் உள்ள துணை முதலமைச்சர் அலுவலகத்திற்கு சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.