தற்போது அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” ஷூட்டிங் நடந்து வருகிறது.
அஜீத், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி தொடங்கி நடந்து வருகிறது. அஜர்பைஜானில் சமீபத்தில் இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான கார் சேஸிங் சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. ஜனவரி இறுதிவரை அஜர்பைஜானில் நடக்க இருந்த “விடாமுயற்சி” ஷூட்டிங்கை திடீரென நிறுத்திவிட்டு இப்போது சென்னை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என தெரிகிறது. ஆனால் மீண்டும் அஜர்பைஜானில் ஷூட்டிங் தொடராது எனவும், அடுத்த கட்ட ஷூட்டிங் துபாயில் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.