நடிகர் விக்ரமின் மகனான துருவ் சினிமாவில் ஓரிரு படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இவர் தற்போது தனக்கென்று ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளார்.
துருவ் தனது இரண்டாவது படமான “மஹான்” படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. துருவ் தற்போது தன்னுடைய யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது சிறுவயது ஆசைகள் மற்றும் கனவுகள் பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.