“துருவ நட்சத்திரம்“ படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

“துருவ நட்சத்திரம்” திரைப்படம் கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவானது. ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக இப்போது காத்திருக்கிறது. படத்தின் டிரெயிலர் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் டிரெயிலர் ரிலீஸ் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.