தேர்தல் ஆணையம் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் மூன்று லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி தொகுதியின் முடிவு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கனிமொழி 426617 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை அடுத்து அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி என்பவர் 123214 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம் 303403. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 101065 வாக்குகள் பெற்றுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் சீலன் 93869 வாக்குகள் பெற்றுள்ளார்.
Related posts:
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
நடிகர் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு! உசிலம்பட்டி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியா!
அமித் ஷா: ஒரு கி.மீ தூரம்.. ஒரு மணிநேரம்; களைகட்டும் பிரசாரம்! - உற்சாகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன்!
பாஜக பிரபலத்தின் கருத்து!