இன்று முதல் 14ம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின்போது எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறக்க பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் முழுதும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருமணம், இறுதி சடங்கு ஆகிய ஊர்வலங்களுக்கு இந்த தடை பொருந்தாது. சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்கு தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியூர் செல்பவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தூத்துகுடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுறுத்தி உள்ளார்.