சுற்றுலா பயணிகள் தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கோடை விடுமுறை காரணமாக பலரும் பல ஊர்களுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். கோடை மழையும் பிடித்துள்ளதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வருகிறது. இன்று தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலரையும் தள்ளத் தொடங்கியுள்ளது. அருவி வெள்ளம் ஆர்ப்பரித்து வந்ததால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடத் தொடங்கியுள்ளனர். அருவியில் குளித்துக் கொண்டிருந்த திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 16 வயது சிறுவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. தற்போது மக்களை வெளியேற்றிவிட்டு சிறுவனை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.