பாலிவுட் நடிகர் ராகுல் தேவ் பழைய டெம்ப்ளேட்டுகளையே தென்னிந்திய சினிமாக்களில் பயன்படுத்துகின்றனர்.
சினிமாவில் நடிகர் ராகுல் தேவ்வுக்கு பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவர் தமிழில் நடித்த “நரசிம்மா,” “ஆதவன்,” “வேதாளம்” மற்றும் “லெஜண்ட்” என அனைத்து படங்களிலும் வில்லன்தான். அவர் தென்னிந்தியா சினிமாக்களின் கதை சொல்லும் பாணி குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 70 மற்றும் 80களின் டெம்ப்ளேட்டையே படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாத ஆக்ஷன் காட்சிகளையே அவர்கள் காட்டுகிறார்கள். ஒரே மாதிரியான கதையை பார்வையாளர்கள் ரசிக்கும் விதமாக சொல்வதால் அது வெற்றியடைகிறது. நான் நடிக்கும் சில படங்களில் எனது புத்திசாலித்தனம் மற்றும் மூளையை வீட்டிலேயே வைத்துவிட்டுதான் சென்று நடிக்க வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.