நடிகர் அரவிந்த் சுவாமி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடிக்க இருந்த அருண் விஜய் அந்த படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அந்த வேடத்தில் ஜீவா அல்லது அரவிந்த் சாமி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தில் அரவிந்த் சாமி இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த படத்தில் பிரேம்ஜி அமரன், சம்பத் மற்றும் பிரியா மணி ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளிகி உள்ளது.