தேசிய கொடியில் கவனமாக இருந்த மோடி

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில், நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக மேடை ஏறினர். அப்போது, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற நாட்டுத் தலைவர்கள் குழுப்புகைப்படம் எடுக்கும்போது, கீழே இருந்த இந்திய தேசிய கொடியை காலில் படாமல் கவனத்துடன் எடுத்து அதை தன் பையில் வைத்தார் பிரதமர் மோடி.