நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கோவை தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியா? என்பது குறித்து தகவல் அளித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் இணைந்து கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது. ஆனால், அக்கட்சியின் சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலுக்கும், பாஜக வானதி சீனிவாசனுக்கும் இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் கமல் தோல்வியுற்றார். இந்நிலையில், கோவை ராஜவீதியில் உள்ள துணி வணிகர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு வந்த கமல், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார். அதன்பின், வரும் தேர்தலில் இங்கு போட்டியிட வேண்டும் என கமலிடன் கூறினார். அதற்கு கமல், “தேர்தல் வரும்போது பார்போம். வேலை செய்வோம்” என்று பதிலளித்தார்.