அடுத்த மாதம் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு 24மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி செய்யப்படும், வேலையில்லாக இளைஞர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக அறிவிக்கப்பட்ட உத்தரவாதங்களையும் சேர்த்து 62 திட்டங்கள்அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவதற்கான அட்டவணையும் இடம் பெற்றுள்ளது.