நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார்.
தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தின் தலைப்பாக ‘ராயன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் நிலையில் அப்போது படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் என படக்குழு இப்போது முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த படம் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது. இந்த படம் மட்டுமின்றி ஏப்ரலில் ரிலீசாக திட்டமிருந்த “தங்கலான்” உள்ளிட்ட பல படங்கள் தங்கள் ரிலீஸ் திட்டத்தை மாற்ற ஆலோசித்துள்ளன.