முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா நீலகிரி தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை போட்டியிடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஆ.ராசா, நீலகிரி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்வேன் என்றும் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மற்றும் 2019ம் ஆண்டு நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ. ராசா போட்டியிட்டு வென்றார். 2009ம் ஆண்டு அவர் வெற்றி பெற்ற போது மத்திய அமைச்சராகவும் இருந்தார். மூன்றாவது முறையாக இந்த தொகுதியில் போட்டியிட ஆ ராசாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் அவர் ராமர் குறித்து பேசிய பேச்சு பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளே கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இம்முறை ஆ.ராசா போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.