கோவை, ஏப்ரல் 24
வே. மாரீஸ்வரன்
கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க. எம். எல். ஏ. களில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி. சி. ஆறுக்குட்டி சிந்தித்து செயலாற்றுவதில் அவருக்கு நிகர் அவரேதான் என்று நம்மிடத்தில் செய்தி வாசிக்கிறார்கள் கவுண்டம்பாளையம் தொகுதி பொதுஜனங்கள்.

ஆம், ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் தொற்று என்று கோவை மாவட்ட மக்களை அச்சுறுத்தி கொண்டுவரும் இந்த நேரத்தில் ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப்போன ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என்று வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள தனது தொகுதி பொதுமக்களுக்கு அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் பல நிவாரண பொருட்களை எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சைலண்டாக வழங்கி கொண்டிருக்கிறாராம்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரிசி மற்றும் நிவாரண பொருட்களை தன்னிலம் கருதாமல் வாரி வழங்கிய வி.சி. ஆறுக்குட்டி எம். எல். ஏ. வுக்கு தொகுதி மக்கள் சிந்தித்து செயலாற்றும் சிந்தனை சிற்பி என்ற பட்டத்தை தந்திருக்கிறார்கள்.
வருகிற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் ரேஸில் கோவை மாவட்டத்தில் முதல் ஆளாக ஓடிவந்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.!
Related posts:
ஆம்புலன்ஸை தொடங்கி வைத்த- அமைச்சர் கே.என்.நேரு!
தொடர்வண்டித்துறை தேர்வு எழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையங்கள் அமைக்கவேண்டும்...
"காங்கிரசில் ஒரு பிரேமானந்தா" - ஒரு ‘கதர் சட்டையின் அர்த்தமுள்ள கதறல்!
அரசு கேபிள் டிவி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்