இன்று முதல் முதலாக பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பல ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் பாலிவுட் நடிகர் அக்சய்குமார் கனடா குடியுரிமை வைத்திருந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தது. கனடா குடியுரிமையை திரும்ப கொடுத்துவிட்டு அவர் இந்திய குடியுரிமை கேட்டு பெற்றார். இந்திய குடியுரிமை பெற்றபின் அவர் முதல் முதலாக இன்று மக்களவைத் தேர்தலில் வாக்களித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம், “இந்தியா வளர்ச்சி அடைய, வலுவானதாக மாற வேண்டும் என்பதற்காக சரியான நபருக்கு வாக்களியுங்கள். மக்கள் தங்களுக்கு எது யார் சரி என்று படுகிறதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மும்பையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது-. பல பாலிவுட் பிரபலங்கள் தேர்தலில் வாக்களித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.