நடிகர் சரத்குமார் அஜீத்தும் சூப்பர் ஸ்டார்தான் என்று பல்டியடித்து தற்போது பேசியுள்ளார்.
வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “வாரிசு” படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175வது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட கலைஞரே வியந்தார். இப்போது விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நான் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டது” எனக் கூறினார். சரத்குமாரின் பேச்சு அஜீத் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சரத்குமார் “நான் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை என்று சொல்லவில்லையே. விஜய் சூப்பர் ஸ்டார் ஆவார் என்றுதான் சொன்னேன். அஜீத்தும் சூப்பர் ஸ்டார்தான். வாழ்க்கையில் சாதிக்கும் எந்த ஒரு நபரும் சூப்பர் ஸ்டார்தான்.” என சமாளித்து மழுப்பியுள்ளார்.