நடிகர் சிரஞ்சீவி தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.
சமீபத்தில் அவர் நடிப்பில் “போலா ஷங்கர்” திரைப்படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் அஜீத் நடித்த “வேதாளம்” திரைப்படத்தின் ரீமேக். சமீபகாலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த சிரஞ்சீவிக்கு, இப்போது டில்லியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஓய்வில் இருக்கும் அவர் விரைவில் அடுத்த படத்தைத் தொடங்குவார் என்று கூறப்படுகிறது.