நடிகர் சூர்யாவின் “கங்குவா” டீசர்!

Filed under: சினிமா |

நடிகர் சூர்யாவின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “சிறுத்தை” சிவா இணையும் திரைப்படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது.

“சிறுத்தை” சிவா இயக்குகிறார் என்றதும் கிராமத்து கதையாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரச காலத்து கதை போன்ற மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திரைப்படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. “சிறுத்தை” சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது, சூர்யா நடிக்கும் முதல் 3டி தொழில்நுட்ப படம் இது. படத்தின் “கங்குவா” டைட்டில் டீசரை ஸ்டூடியோ கிரீன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.