நடிகர் சூர்யா படம் குறித்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Filed under: சினிமா |

சென்னை, செப் 27:
நடிகர் சூர்யாவின், ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

படத்தின் வசன பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு பாடலை சென்னையிலும் இன்னொரு பாடலை கோவாவிலும் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த படத்தை வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.