நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பேசுவது திமிர்த்தனம் என்றும் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார்.
பிரதமர் மோடி சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசினார். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் “420 மோசடி பேர்வழிகள் 400 இடங்களில் வெற்றி பெறுவோம், 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் கட்சிகள் திமிர் தனமானவை. ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் எந்த ஒரு கட்சியும் 100 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்பில்லை. 400 இடங்களுக்கு மேல் வெற்றி வருகிறது என்றால் மோசடி மூலம் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் லோக்சபா தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என பிரதமர் மோடி பேசிய நிலையில் அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியுள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவை எதிர்த்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் அனைவருக்கும் தெரிந்ததே.