நடிகர் மாரிமுத்து மறைவு!

Filed under: சினிமா |

பன்முகத்தன்மை கொண்ட நடிகர் மாரிமுத்து இன்று மாரடைப்பால் காலமானார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, “நடிகர் மாரிமுத்து இயல்பான மனிதர். அவரது இழப்பு நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னுடன் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் பணியாற்றினார். ஒரு இயக்குநருக்கு நடிகருடைய ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அதனை உள் வாங்கிக் கொண்டு நடிப்பவர். இயக்குநராக 2 படம் எடுத்து முடித்த பிறகு ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் நடிக்க வந்தார். எனது அரசியலை புரிந்து கொண்டு அந்த படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார். அது மறக்க முடியாத அனுபவம். அவரது இறப்பு எல்லாருக்கும் பெரும் நெருக்கத்தை உண்டாக்கி விட்டது இவ்வாறு இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில், “திரு.மாரிமுத்து அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில், ‘மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும் போது, “அண்ணனின் இறப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. காலையில் எழுந்த போதே ஒரு சோகமான செய்தி. என் முதல்படத்தில் எனக்குப் பல விதத்தில் உறுதுணையாக இருந்தார். என்னோடு தொடர்பில் இருந்தார். விரைவில் அவருடன் இணைந்து ஒரு படம் பண்ண இருந்தேன். பல புதுமுக இயக்குனர்களுக்கு பக்கபலமாக இருந்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.